தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களில் பெரும்பாலும் கமர்சியல் நோக்கத்திலேயே செயல்படுகின்றன. சினிமா, விவாதம், செய்திகள், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை அடிப்படையாகக கொண்டு மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
இவற்றிற்கு விதிவிலக்காக தமிழ் மொழியின் எழுச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகின்றன.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகளை குறித்து இக்கட்டுரையின் மூலம் காண்போம்.
ஒரு வார்த்தை ஒரு லட்சம்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஒரு வாரத்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி ஒளிப்பரப்படுகின்றது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தமிழ் சொற்களை மையமாக கொண்டு விளையாடப்படும் விளையாட்டு தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். இரு நபர்கள் கொண்ட அணிகளாக இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது. எதிரெதிராக ஒரே அணியைச் சேர்ந்த நபர்கள் போட்டிக் களத்தில் நிற்க வேண்டும். அதில் ஒரு நபருக்கு மட்டும் ஒரு சொல் மானிட்டர் மூலம் ஒளிப்பரப்படும். அச்சொல்லுக்கு இணையான அர்த்தமாகவோ அல்லது எதிராகவோ உள்ள ஒரு சொல்லை எதிரே உள்ள நபருக்கு கூற வேண்டும். அத்கபட்சமாக ஒரு சொல்லுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கென்று ஒரு வார்த்தை ஒரு சொல் சீனியர் தொகுப்பும், பள்ளி மாணவர்களுக்காக ஒரு வார்த்தை ஒரு சொல் ஜூனியர் நிகழ்ச்சியும் ஒளிப்பரப்படுகின்றது.

மொழி அறிவோம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு ஒளிபரப்படும் புதிய விடியல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மொழி அறிவோம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மொழியை தவறின்றி தெளிவாக பேசுவதற்கும், எழுதுவற்கும் எளிய முறையில் கற்றுத் தருகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரஞ்சன் பாரதி. அதுமட்டுமல்லாது தமிழ் மொழியின் அருமைகள், பழமொழிகளின் பயன்பாடு, இலக்கணம், வரலாறு, பண்பாடு ஆகியவகைக் குறித்தும் விளக்கமாக விவரிக்கிறார் தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு
பேச்சாற்றலுக்கு புகழ் பெற்ற தமிழகத்தில் "தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு" என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. இது ஒரு தமிழ் மொழிப் பேச்சுபோட்டி நிகழ்ச்சியாகும். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி குழுமத்தின் தமிழ் மொழி வளர்ச்சி முனைப்பில் மற்றுமொரு முயற்சியாகும்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள ஊர்களில் வசிப்பவர்கள் தான் இதன் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் ஆகியவற்றை பிழையின்றி பேசுபவர்களை அடையாளம் காண்பது தான் இதன் நோக்கம். பல்வேறு சுடுறுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் அசத்தலாக பேசும் போட்டியாளரை நடுவர்களாக அமர்ந்துள்ள தமிழ் அறிஞர்கள் தெரிவு செய்கின்றனர். அதில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டுகின்றது விஜய் குழுமம். கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்படும் இந்நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் பலத்த வரவேற்பு அளித்து, அங்கீகரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நொடிக்கு நொடி அதிரடி
மக்கள் தொலைக்காட்சியில் வார நாட்களில் தினந்தோறும் இரவு 9.02 மணிக்கு நொடிக்கு நொடி அதிரடி நிகழ்ச்சி ஒளிப்பரப்பகின்றது. இதனை சித்திரா என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சொற்களுக்கான அர்த்ததத்தையும், மறைந்துள்ள எழுத்துகளில் இருந்து தமிழ் சொற்களை அறிந்துக் கூற வேண்டும். இது ஒரு தமிழ் மொழி விளையாட்டுப் போட்டி. நேரலையாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைபேசி வாயுளாக போட்டியாளர்கள் பங்குபெறுவர். இதில் வெற்றி பெற போட்டியாளர்கள் இரண்டு சுற்றுகளில் பங்குபெற்று வெற்றிப்பெற வேண்டும். குறிப்பை பார்த்து விடை சொல்லுதல் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள சொற்களை பொருத்துதல் ஆகிய பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை காண்பதன் மூலம் எளிய முறையில் அரிதான தமிழ் சொற்களின் அர்த்தங்களை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் தமிழ் பேசு தங்கக் காசு, தமிழ்ப்பண்ணை, களத்துமேடு, வில்லும் சொல்லும், தமிழ் கூடல், பண் பாடல்கள் போன்ற நிகழ்சிகள் வாயுலாகவும் தமிழை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றது மக்கள் தொலைகாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல காட்சி ஊடகங்களின் மூலம் தமிழ் மொழியின் புகழை பரப்பும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
வளர்க தமிழ்....

பதிவுக்கு நன்றி..
ReplyDeleteஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ யமநத