வேட்டியுடன் - மகாகவி
கடந்த ஜூலை மாதம் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த விழாவிற்கு வேட்டி அணிந்து சென்ற விருந்தினர்களை நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர் கிரிக்கெட் கிளப்பின் நிர்வாகிகள். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வேட்டி அணிந்து செல்வதற்கு தடை விதிப்பதா என பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது இந்திய அளவில் வேட்டி விவகாரம் விவாதிக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டியின் முழுவிவரத்தையும் இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்துக் கொள்வோம்.......
வேட்டி எப்படி உருவானது?
முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நாகரிக முறையில் வாழத் துவங்கியவுடன் செடிகொடிகளிலுள்ள இலை மற்றும் தழைகளை ஆடையாக உடுத்த ஆரம்பத்தினர். காலப்போக்கில் நூல் இழைகள் உருவான பிறகு வேட்டி மற்றும் சிறு வடிவிலான துணிகளை நெய்து உடுக்கத் துவங்கியுள்ளனர். உலகளவில முதலாம் நூற்றாண்டு முதலே வேட்டியை உடுத்த ஆரம்பித்துள்ளனர் மக்கள் என்பதும் சிற்பங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேட்டியுடன் - வள்ளுவரும் அவ்வையும்
வேட்டியுடன் - வள்ளுவரும் அவ்வையும்
தமிழகத்தில் எப்படி வேட்டிக் கட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது?
அந்தந்த நாட்டில் நிலவும் தட்ப வெப்பம், சூழல், பண்பாடு, தொழில் முறை முதலியவற்றை குறிக்கும் விதமாக உடை நெய்யப்படுகின்றன. அப்படி தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ற உடையாக வேட்டி இருந்தமையால், வேட்டியை உடுத்த துவங்கியுள்ளனர் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள்.
துவக்கத்தில் அரசர்களும், புலவர்களும், அந்தணர்களும் மட்டுமே வேட்டியை உடுத்தியுள்ளனர். காலப் போக்கில் தமிழர்களின் பாரம்பரிய உடையாக மறுவியுள்ளது வேட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
துவக்கத்தில் அரசர்களும், புலவர்களும், அந்தணர்களும் மட்டுமே வேட்டியை உடுத்தியுள்ளனர். காலப் போக்கில் தமிழர்களின் பாரம்பரிய உடையாக மறுவியுள்ளது வேட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்கக்காலத்து தமிழ் நூல்களில் (பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை) தமிழர்கள் வேட்டியை உடுத்தி வாழ்ந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முற்காலத்தில் வேட்டி காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது. காழகம் என்பதற்கு அரையில் கட்டப்பெறும் ஆடை என்பது பொருள். மேலும் வேட்டி பர்மாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தது என்றும் கூறப்படுகின்றது.
வேட்டியுடன் - அரசியல் தலைவர்கள்
வேட்டியுடன் - அரசியல் தலைவர்கள்
புராணக் காவியங்களில் - வேட்டி
அர்ஜுனன் ஆற்றங்கரையோரம் ஒரு முறை சென்ற பொழுது மூன்று சேலைகளை தவறுதலாக யாரோ கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று எண்ணி அதனை கையில் எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றுள்ளார். பின்னர் தான் சேலைகளைக் கண்டெடுத்த கதையைக் கூறியுள்ளார். அதற்கு அவரது தாயார் அந்த சாலைகளை சரிபாதியாக வெட்டி பாண்டவர்கள் ஐவரையும் கட்டிக் கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார். அதன் பின்னர் பாண்டவர்கள் ஐவரும் தங்களது வயிறு மற்றும் அதற்கு கீழுள்ள உடல் பகுதியை மறைக்கும் விதமாக, இடையின் அருகே முடிந்து வேட்டியை உடுத்தியுள்ளனர் என்கின்றது மகாபாரதம்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள ஆலயங்களில் இடபெற்றுள்ள சிலைகளும் வேட்டி வடிவிலான உடையை அணிந்திருப்பதை காணலாம்.
வேட்டியின் வகைகளும் - அணியும் முறையும்
தற்போது நான்கு முழம், எட்டு முழம் மற்றும் கரை வேட்டி ஆகிய வகை வேட்டிகள் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செவ்வக வடிவில் உள்ள வேட்டியை வயிறு மற்றும் அதற்கு கீழுள்ள உடல் பகுதியை மறைக்கும் விதமாக உடுத்தி வருகின்றனர் தமிழர்கள். வெள்ளை நிறங்களில் மட்டுமே உருவாக்கப்பட்ட வேட்டிகள் தற்போது பல்வேறு வண்ணங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பட்டு வேட்டி, பருத்தி வேட்டி, பாலிஸ்டர் வேட்டி என பல்வேறு ரகங்கங்களிலும் வேட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வேட்டியோடு அணியப்படும் மற்ற உடைகள்
துவக்கத்தில் தமிழர்கள் வேட்டியோடு மேல் துண்டு அணிவதை மரபாக கடைப்பிடித்து வந்துள்ளனர். மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் கால்பதித்த பின்னர் வேட்டிக்கு மேலே மேல் சட்டையையும் அதன் மேல் துண்டையும் தற்போது அணிந்து வருகின்றனர்.
பிற மாநிலங்களில் வேட்டி
தமிழகத்தில் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசா,மகாராஷ்டிரா, குஜாராத், மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், பீகார், அசாம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்களும் வேட்டி உடுத்தி வருகின்றனர். மேலும் மலாத் தீவு மற்றும் ஆப்ரிக்கா கண்டத்தில் வாழும் சோமாலியர்களும் வேட்டியை உடுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் வேட்டியின் நிலை?
விழாக்காலங்களில் மட்டுமே வேட்டி உடுத்துவதற்கேற்ற உடை என்ற நிலை தற்போது தமிழகத்தில் மாறத் துவங்கியுள்ளது. அண்மை காலமாக பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் வேட்டியைக் கட்டத் துவங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெரு நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து வேட்டியை வாரத்தில் ஒரு நாள் உடுத்திக் கொண்டு நகர்வலம் வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் இளைஞர்கள் மத்தியில் நமது மரபு உடையான வேட்டிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் வேட்டியை உடுத்த முன்வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசாங்கம் வேட்டி தினத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் பயன் பெறுவர். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நெய்யப்பட்ட கதற ஆடையில் வேட்டியும் முக்கிய அங்கம் வகித்தது. மொத்தத்தில் வேட்டி தமிழர்களது பாரம்பரிய உடை மட்டுமின்றி இந்திய திருநாட்டின் பாரம்பரிய உடை.....
தமிழர்கள் உடுத்தும் பிற ஆடைகள்
வேட்டி மட்டுமின்றி தழையுடை, மரவுரி, துகில், கலிங்கம், அறுவை, வம்பு, படம், உடுக்கை, கச்சு, ஈரணி, காழகம், கச்சை, மடி, பட்டு, கம்பல், கூறை, வட்டுடை, சேலை என பலபல்வேறு ஆடைகளை அவரவர் தொழில் மற்றும் தேவைக்கு ஏற்ப உடையை உடித்திய்ள்ளனர் எனக் கூறுகின்றது சங்க இலக்கியங்கள்.
மொத்தத்தில் எளிமை உடையான வேட்டி நமது மரபு உடையே....
வேட்டிக்கு தடை விதித்தால் ஒராண்டு சிறை தண்டனை என தமிழக அரசு சட்ட முன்வடிவு தாக்கல் செய்துள்ளது
தனியார் மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரங்குகள், கலைக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது தமிழ் பாரம்பரியம் மிக்க வேட்டியை அணிவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமை அளிக்கும் வகையில் சட்டமுன்வடிவு அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கூறிய இடங்களில் வேட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
வேட்டிக்கு தடை விதித்தால் ஒராண்டு சிறை தண்டனை என தமிழக அரசு சட்ட முன்வடிவு தாக்கல் செய்துள்ளது
தனியார் மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரங்குகள், கலைக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது தமிழ் பாரம்பரியம் மிக்க வேட்டியை அணிவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமை அளிக்கும் வகையில் சட்டமுன்வடிவு அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கூறிய இடங்களில் வேட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment